என் பெயர் லார்கோ
இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த புத்தகம் கிடைத்தது.பெரிய சைசில் முழு வண்ணத்தில் பளபளப்பான பக்கங்களுடன் பார்த்த உடனேயே மனதை கொள்ளை கொண்டுவிட்டது.முத்து காமிக்ஸ் ஆசிரியர் திரு.விஜயன் கூறியது போல நிச்சயமாய் இது ஒரு மைல் கல் தான்.இனி எனது ரேட்டிங்.
கதை (17/25)
மிக விறுவிறுப்பாக செல்லும் கதை.முதல் பகுதியை விட இரண்டாம் பகுதி விறுவிறுப்பு அதிகம்.இடையில் கதை சற்று மெதுவாக செல்வது போல் இருந்தாலும் கதை தரமான கதையே.
படங்கள் (16/25)
காமிக்ஸின் படங்கள் அருமை.மிக நேர்த்தியான ஓவியம் கதைக்கு பலம் சேர்க்கிறது.ஆனாலும் வில்லியம் வான்ஸ் அவர்களின் படங்களை போல் Philippe Francq அவர்களின் படங்களில் நுணுக்கம் குறைவு.இருந்தாலும் இஸ்தான்புல்,நியூயார்க்,சுவிற்சர்லாந்து என்று நம்மை அவர் அவ்விடத்துக்கே அழைத்து போகிறார்.
மொழிபெயர்ப்பு (15/25)
மொழிபெயர்ப்பு பெரிதாக இல்லாவிட்டாலும் ஒ.கே ரகம்.கூடியவரை ஆங்கில சொற்களை தவிர்த்திருப்பது வரவேற்க்கதக்கது.
அமைப்பு (15/20)
தரமான தாள்,அருமையான அட்டைப்படம்,A4 ரக புத்தக அமைப்பு,உறுதியான பைண்டிங்,பிற்சேர்க்கைகள் என எல்லாமே அட்டகாசம்.
விலை (3/5)
மேற்கூறிய அம்சங்களை வைத்து பார்த்தால் இப்புத்தகத்தின் விலை ஏற்றுக்கொள்ளகூடியதே.
ஆக முத்து காமிக்ஸ் சர்ப்ரைஸ் ஸ்பெஷல் என் அளவில் 66 மார்க் பெற்றுள்ளது.அனைவரும் படிக்க வேண்டிய இதழ் இது என்பது குறிப்பிடத்தக்கது.
